இந்தியா

மும்பையில் 17 மணி நேரம் வரிசையில் காத்து நின்று முதல் 'ஐ போன்-15' வாங்கிய வாலிபர்

Published On 2023-09-23 10:30 GMT   |   Update On 2023-09-23 10:30 GMT
  • ஆப்பிள் ‘ஐ போன்’ விற்பனை நிலையத்தில் மணிக்கணக்கில் வாடிக்கையாளர்கள் திரண்டதால் முதல் போனை வாங்க நீண்ட வரிசையில் காத்து நிற்க தொடங்கினர்.
  • அகமதாபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மும்பையில் 17 மணி நேரம் வரிசையில் காத்து நின்று இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் ‘ஐ போன்-15’- ஐ வாங்கி உள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வரிசையில் 'ஐ போன்-15' நேற்று இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. மும்பை, டெல்லியில் உள்ள ஆப்பிள் 'ஐ போன்' விற்பனை நிலையங்களில் இந்த விற்பனை தொடங்கிய நிலையில், புதிய 'ஐ போன்'-ஐ வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினம் முதலே குவியத்தொடங்கினர்.

குறிப்பாக மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஆப்பிள் 'ஐ போன்' விற்பனை நிலையத்தில் மணிக்கணக்கில் வாடிக்கையாளர்கள் திரண்டதால் முதல் போனை வாங்க நீண்ட வரிசையில் காத்து நிற்க தொடங்கினர்.

அந்த வகையில், அகமதாபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் மும்பையில் 17 மணி நேரம் வரிசையில் காத்து நின்று இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் 'ஐ போன்-15'- ஐ வாங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் நேற்று மாலை 3 மணி முதல் இங்கு இருக்கிறேன். இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரில் முதல் 'ஐ போன்'-ஐ பெறுவதற்காக 17 மணி நேரம் வரிசையில் காத்திருந்தேன். நான் அகமதாபாத்தில் இருந்து இதற்காக வந்துள்ளேன். முதல் நாளிலேயே இந்த போனை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

Tags:    

Similar News