டெல்லி அமைச்சர் அதிஷியை மருத்துவமனையில் சந்தித்த அகிலேஷ் யாதவ்
- டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 21-ந்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அதிஷிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் கடும் வெப்ப அலை நிலவி வருகிறது. அதனால் வரலாறு காணாத தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து தண்ணீர் சரியான முறையில் கொடுக்காததே டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் என டெல்லி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதையடுத்து யமுனை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் அளவை குறைக்கும் அரியானா அரசை கண்டித்து, டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடந்த 21-ந்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி நேற்று 5-வது நாளை எட்டிய நிலையில் அதிஷியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையத்து அவர் டெல்லியில் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ரத்த சர்க்கரை அளவு குறைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டெல்லி அமைச்சர் அதிஷியை உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.