இந்தியா

சபாநாயகர் அதிகாரம் குறித்து பேசிய அகிலேஷ்: கொந்தளித்த அமித்ஷா

Published On 2024-08-08 11:32 GMT   |   Update On 2024-08-08 11:32 GMT
  • மத்திய அரசு மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தது.
  • இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

புதுடெல்லி:

மத்திய அரசு பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின்தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றுப் பேசினர்.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், கன்னோஜ் தொகுதி எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் மக்களவையில் இன்று பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், உங்கள் உரிமைகள் மற்றும் எங்கள் உரிமைகள் குறைக்கப்படுகின்றன. நீங்கள் ஜனநாயகத்தின் நீதிபதி என நான் சொல்லி இருந்தேன். உங்களின் சில உரிமைகள் பறிக்கப்படுவதாகவும், உங்களுக்காக நாங்கள் போராட வேண்டும் என கேள்விப்பட்டேன் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, இது தலைவரை அவமதிக்கும் செயலாகும். சபாநாயகரின் உரிமை எதிர்க்கட்சிகளுக்கு சொந்தமானது அல்ல. முழு சபைக்கும் சொந்தமானது. இதுபோல் இனிமேல் பேசாதீர்கள். நீங்கள் சபாநாயகரின் உரிமைகளைப் பாதுகாப்பவர் அல்ல என காட்டமாக பதிலடி கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவிடம் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, நீங்களும், சபையின் மற்ற உறுப்பினர்களும் தலைவர் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது. இது எனது எதிர்பார்ப்பு. சபாநாயகர் நாற்காலி குறித்து தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் கூறக்கூடாது என தெரிவித்தார்.

Tags:    

Similar News