அடகு கடையில் இருந்து மீட்ட நகைகளை ஒரே நொடியில் திருடனிடம் பறிகொடுத்த வயதான தம்பதி.. வீடியோ
- அடகுக்கடையில் இருந்து நகைகளை மீட்டுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும்போது பேரனுக்கு வடா பாவ் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
- தங்க நகைகளை ஒருவன் திருடிக்கொண்டு ஓடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் பேரனுக்கு வடா பாவ் வாங்க வண்டியை நிறுத்திய வயதான தம்பதியிடம் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ. 4.95 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை ஒருவன் திருடிக்கொண்டு ஓடும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், தசரத் பாபுலால் -ஜெயஸ்ரீ என்ற மூத்த தம்பதியினர் அடகுக்கடையில் இருந்து ரூ.4.95 மதிப்புடைய தங்களது தங்க நகைகளை மீட்டுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும்போது பேரனுக்கு வடா பாவ் வாங்குவதற்காக புனே -சோலாப்பூர் சாலையில் உள்ள கடை ஒன்றின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
பாபுலால் வடா பாவ் வாங்கச் சென்ற நிலையில் வாகனத்தின் அருகே நின்றுகொண்டிருந்த ஜெயஸ்ரீ சற்று அசந்த நேரம் பார்த்து அவ்வழியாக வந்த ஒருவன் வண்டியின் முன்புறம் இருந்த நகைகள் அடங்கிய பையை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தான். ஜெயஸ்ரீ அவனை துரத்தியும் பிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி தொலைக்காட்சி காட்சிகளின் அடிப்படையில் திருடனைத் தேடி வருகின்றனர்.