இந்தியா

நிதியுதவி அளித்த சிம்புவுக்கு நன்றி தெரிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

Published On 2024-09-11 14:58 GMT   |   Update On 2024-09-11 14:58 GMT
  • இயற்கைப் பேரிடராக அறிவிக்க அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர்.
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் திரைப் பிரபலங்கள் நிதி வழங்கினர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும் குறிப்பாக விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கினர்.

இதே போன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார்.

வெள்ள பாதிப்பு நிதி உதவி வழங்கிய நடிகர் சிம்புவுக்கு ஆந்திர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் திரு சிலம்பரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


Tags:    

Similar News