இந்தியா

ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா

இந்தாண்டு இறுதிக்குள் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்படும் - அசாம் முதல் மந்திரி

Published On 2023-05-22 17:23 GMT   |   Update On 2023-05-22 17:23 GMT
  • இந்தாண்டு இறுதிக்குள் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்படும் என அசாம் முதல் மந்திரி தெரிவித்தார்.
  • இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

கவுகாத்தி:

வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகாலயாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஏ.எப்.எஸ்.பி.ஏ. எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்தியது. இச்சட்டத்தின்படி ராணுவத்தினர் எந்த இடத்திலும் சோதனை நடத்துவதுடன் யாரையும் வாரன்ட் இன்றி கைது செய்யலாம்.

இந்தச் சட்டத்தை ரத்து செய்ய அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா கூறுகையில், மக்களின் கோரிக்கையின்படி மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் இந்தாண்டு நவம்பர் இறுதிக்குள் திரும்ப பெறப்படும். மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு பதிலாக அசாம் போலீஸ் பட்டாலியன் செயல்படுவார்கள். எனினும், சட்டத்தின்படி மத்திய ஆயுத போலீஸ் படைகளும் இருப்பார்கள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News