மனைவிக்கு சீட் வழங்க மறுப்பு: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அசாம் எம்.எல்.ஏ.
- ராணீ நரா மூன்று முறை லகிம்புர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- ஒருமுறை மாநிலங்களவை எம்.பி.யாகவும், மத்திய இணை மந்தியாகவும் இருந்துள்ளார்.
அசாம் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பரத் சந்த்ரா நரா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் நயோபொய்சா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த சட்டமன்ற தொகுதி லகிம்புர் மாவட்டத்தில் உள்ளது.
லகிம்புர் மக்களவை தொகுதியாகவும் உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட அவரது மனைவி ராணீ நராவிற்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கும் என பரத் சந்த்ரா நரா எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் உதய் ஷங்கர் ஹஜாரிகாவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் விரக்தியடைந்த பரத் நரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். பரத் சந்த்ரா நராவின் மனைவி ராணீ நரா மத்திய இணை மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஐந்து முறை தகுவாகானா தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டள்ளார். கடந்த 2021-ல் 6-வது முறையாக நயோபொய்சா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டார். இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு முன் ஆசாம் கன பரிசத் கட்யில் இருந்தார்.
இவருடைய மனைவி ராணீ நரா மூன்று முறை லகிம்புர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் மாநிலங்களை எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.