அசாம்: காங்கிரசில் இருந்து விலகிய அங்கிதா தத்தா பா.ஜ.க.வில் இணைகிறார்
- கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அங்கிதா தத்தா கட்சியை விட்டு நீக்கப்பட்டார்
- அங்கிதா தத்தா இன்று பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது.
கவுகாத்தி:
அசாம் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் அங்கிதா தத்தா. இவர் இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவரான பி.வி.சீனிவாசுக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். தான் அவமானத்துக்கு ஆளாவதாகவும், பாலின பாகுபாடு ஏவப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதனை அசாம் பா.ஜ.க. முதல் மந்திரியான ஹிமந்த் பிஸ்வா சர்மா வரவேற்றிருந்தார்.
இதற்கிடையே, இதுதொடர்பாக அங்கிதா தத்தாவிடம் மாநில காங்கிரஸ் தலைமை விளக்கம் கேட்டது. அவரது விளக்கம் ஏற்கப்படவில்லை. இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அங்கிதா தத்தாவை 6 ஆண்டுகளுக்கு நீக்கி காங்கிரஸ் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அங்கிதா தத்தா இன்று பாஜகவில் இணைய உள்ளார் என தகவல் வெளியானது.
இவருடன் காங்கிரசின் முன்னாள் எம்.எல்.ஏ. பிஸ்மிதா கோகோயும் பா.ஜ.க.வில் இணைகிறார்.