பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: 98 பேருக்கு ஆயுள் தண்டனை- அதிர்ச்சியில் ஒருவர் உயிரிழப்பு
- கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு விவரங்களை அறிவித்துள்ளது.
- தீர்ப்பு அக்டோபர் 21ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.
கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அறிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மரகும்பி கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு மீதான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பு அக்டோபர் 21ம் தேதி வழங்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.
இதில், 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை கொப்பல் மாவட்ட நீதிமன்றம் வழங்கியது.
வழக்கில் தொடர்புடைய சிறார்களை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தீர்ப்பு விவரங்களை கேட்ட உடனே ஆயுள் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.