பாஜக தேசிய தலைவர் ஆகிறார் சிவராஜ் சிங் சவுகான்?
- பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது.
- மனோகர் லால் கட்டார், வினோத் தாவ்டே பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது.
பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும்.
2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக டெல்லியில் ஜே.பி.நட்டா இல்லத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் அரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.