இந்தியா

அரசியலமைப்பை மாற்ற பாஜக 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும்- பாஜக எம்பி லல்லு சிங்

Published On 2024-04-14 09:22 GMT   |   Update On 2024-04-14 09:22 GMT
  • வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார்
  • பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியும் என்று பாஜக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர்

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார். இதனையடுத்து பாஜகவினர் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதை தேர்தல் முழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியும் என்று பாஜக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என ராஜஸ்தான் மாநிலம் நாகூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோதி மிர்தா மக்களிடையே பேசுகையில், "அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும். அதற்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பலம் வேண்டும். அதற்கு பெரியளவில் பெரும்பான்மை பெற்று இம்முறை நாம் வெற்றி பெற வேண்டும்" என கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக இதே போல அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கர்நாடகா பாஜக எம்.பி அனந்த் குமார் ஹெக்டே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்நிலையில், "272 இடங்களில் வென்றாலே ஆட்சி அமைக்கலாம். ஆனால், அரசியலமைப்பை மாற்ற பாஜக 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்" என்று அயோத்தி பாஜக வேட்பாளரும், எம்.பி-யுமான லல்லு சிங் பேசியுள்ளது இந்த சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.

பாஜக எம்.பி.க்களின் இத்தகைய சர்ச்சை பேச்சை எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கண்டித்து வருகின்றனர். பாஜக இந்த தேர்தலில் வென்றால் அரசியலமைப்பை மாற்றி விடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News