இந்தியா

மகாபிரபு நீங்களா!.. பாலிவுட் நடிகர் படத்துடன் கோடிக் கணக்கில் கள்ளநோட்டு.. சிக்கிய குஜராத் கும்பல்

Published On 2024-09-30 05:59 GMT   |   Update On 2024-09-30 05:59 GMT
  • சாகித் கபூர், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஃபார்சி ['Farzi'] வெப் சீரிஸை பார்த்து அச்சடிக்கப்பட்டுள்ளது.
  • ரிசர்வ் பேங் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக ரிசோல் பேங் ஆப் இந்தியா என்றும் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா என்றும் அச்சிடப்பட்டுள்ளது.

குஜராத்தில் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் புகைப்படத்துடன் அச்சிடப்பட்ட கோடிக்கணக்கில் மதிப்புடைய கள்ளநோட்டுகள் சிக்கியுள்ளது. சாகித் கபூர், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஃபார்சி ['Farzi'] வெப் சீரிஸை பார்த்து இன்ஸ்பயர் ஆகி அதில் வருவது போல் ஏமாற்றி பணம் சம்பாதிக்க நினைத்த கும்பல் ஒன்று மகாத்மா காந்திக்கு பதிலாக பாலிவுட் நடிகர் அனுபம் கேரின் படத்தை கொண்ட ரூ.1.30 கோடி மதிப்பிலான 500 ருபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்துப் பதுக்கிவைத்துள்ளது.

இந்த நோட்டுகளில் ரிசர்வ் பேங் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக ரிசோல் பேங் ஆப் இந்தியா என்றும் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா என்றும் அச்சிடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த கள்ளநோட்டுகளை காவல்துறை தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக சூரத் நகரில் பதுங்கி இருந்த நால்வரை குஜராத் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர்களுள் ஒருவரான அனுபம் கேர் நடிப்பில் எமர்ஜென்சி படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News