இந்தியா

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-10-14 03:44 GMT   |   Update On 2024-10-14 06:00 GMT
  • அதிகாலை 2 மணிக்கு நியூயார்க் நகருக்கு ஏர்-இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.
  • தயார் நிலையில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் ஏறி சோதனை நடத்தினார்கள்.

மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு நியூயார்க் நகருக்கு ஏர்-இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது.

சிறிது நேரத்தில் இந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுபற்றி கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டு அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது.

உடனே அங்கு தயார் நிலையில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் ஏறி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்று தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த வெடிகுண்டு புரளியால் அந்த விமானத்தில் சென்ற பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள்.

Tags:    

Similar News