இந்தியா (National)

ஆந்திர தேர்தல் கலவரம்- தன்னார்வலர் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்

Published On 2024-05-30 05:31 GMT   |   Update On 2024-05-30 05:31 GMT
  • நாகிரெட்டி பாலத்தில் போலீசார் நேற்று வீடு வீடாக சோதனை நடத்தினர்.
  • அரசு தன்னார்வலர் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திராவில் வாக்குபதிவின் போது பல்வேறு இடங்களில் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. அப்போது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வீட்டில் சோதனை செய்தபோது வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் வெடிகுண்டுகள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் பல்நாடு மாவட்டத்தில் பெல்லம் கொண்டா நாகிரெட்டி பாலத்தில் போலீசார் நேற்று வீடு வீடாக சோதனை நடத்தினர்.

அப்போது அரசு ஊழியராக வேலை செய்து வரும் தன்னார்வலர் ஒருவர் வீட்டிலிருந்து வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவரின் தந்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அப்பகுதி தலைவராக இருந்து வருகிறார். அரசு தன்னார்வலர் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News