இந்தியா (National)

மகாராஷ்டிரா செல்கிறார் அகிலேஷ் யாதவ்: இந்தியா கூட்டணியில் கூடுதல் இடங்கள் பெற திட்டம்

Published On 2024-10-17 13:55 GMT   |   Update On 2024-10-17 13:55 GMT
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
  • கடந்த முறை 7 இடங்களில் போட்டியிட்ட நிலையில், தற்போது அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 288 இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவ சேனா கட்சிகள் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் நாளை மகாராஷ்டிரா செல்கிறார்.

அவர் இந்தியா கூட்டணியில் மகாராஷ்டிரா மாநில தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடும் வகையில் இடங்களை கேட்டு வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்தமுறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஏழு இடங்களில் போட்டியிட்டது. இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.

"நாளை நான் மகாராஷ்டிரா செல்கிறேன். இந்தியா கூட்டணி வெற்றியை உறுதி செய்வதுதான் எங்களுடைய முயற்சி. மகாராஷ்டிராவில் சரத் பவார், உத்தவ் தாக்கரே கட்சி தலையைிலான இந்தியா கூட்டணியில், சமாஜ்வாடி உள்ளிட்ட மற்ற கட்சிகளும் அடங்கும்.

எங்கள் கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது நாங்கள் இந்தியா கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் வகையில் அதிகமான இடங்களை கேட்போம். எங்களின் முழு பலத்துடன் இந்தியா கூட்டணிக்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம்" என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News