இந்தியா

நாளை மறுநாள் சட்டசபை தேர்தல்- மத்தியபிரதேசம், சத்தீஸ்கரில் பிரசாரம் ஓய்ந்தது

Published On 2023-11-15 13:50 GMT   |   Update On 2023-11-15 13:50 GMT
  • மத்திய பிரதேசத்தில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
  • சத்தீஸ்கரிலும் தலைவர்கள் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் கடந்த 7-ந் தேதி வாக்குப்பதிவு நடந்து இதேபோல சத்தீஸ்கர் மாநிலத்துக்கான முதல் கட்ட தேர்தலும் 7-ந் தேதி நடைபெற்றது.

230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்துக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.

இதையொட்டி மத்திய பிரதேசத்தில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி நேற்று இறுதிகட்ட பிரசாரம் செய்தார். பெதுல், ஷாஜாபூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி போபால் அருகே உள்ள விதிஷாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் முதல் கட்டமாக 20 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. 2-வது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது.

இதற்கான பிரசாரமும் இன்று மாலையுடன் ஓய்ந்தது. சத்தீஸ்கரிலும் தலைவர்கள் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News