இந்தியா
லட்சத்தீவு எம்.பி முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து- மக்களவை செயலகம் அறிவிப்பு
- சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
- சிறை தண்டனையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், கேரள நீதிமன்றம் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.
லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து கவரட்டி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
சிறை தண்டனையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், கேரள நீதிமன்றம் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.
இருப்பினும், தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்யாததால் முகமது பைசல் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்தது.
இந்நிலையில், லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டு மக்களவை செயலகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.