இந்தியா

திருமலை பயணம் ரத்து: ஜெகன் மோகன் குற்றச்சாட்டுக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி

Published On 2024-09-27 14:02 GMT   |   Update On 2024-09-27 14:06 GMT
  • வெங்கடேசப் பெருமானை நம்புபவர்கள் திருமாலை வழிபடவும், தரிசிக்கவும் வரவேற்கப்படுகிறார்கள்.
  • ஜெகன் மோகன் ரெட்டி கோவிலுக்கு போகக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை.

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திருப்பதி செல்வதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து பேட்டியளித்த ஜெகன் மோகன் ரெட்டி, "திருப்பதி திருமலையில் பெருமாளை கும்பிட வந்தால் கைது செய்வீர்களா ? அது சட்டத்துக்கு புறம்பான செயல் என வர்ணிப்பீர்களா ? நான் திருமலைக்கு வருவதை தடுக்க அரசு முயற்சிக்கிறது" என்றார்.

கெஜன் மோகன் ரெட்டியின் இந்த குற்றச்சாட்டுக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி அளித்துள்ளார்.

அதில், "ஜெகன் மோகன் ரெட்டி திருமலைக்கு வருவதற்கு அரசு எந்த இடையூறும் உண்டாக்கவில்லை. ஏழுமலையானை நம்புபவர்கள் திருமலைக்கு வருவதை வரவேற்கிறோம்" என்று ஜெகன் மோகன் ரெட்டியின் குற்றச்சாட்டுக்கு, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

திருமலைக்கு வருவதற்கு அரசு தடை விதித்ததாக முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

வெங்கடேசப் பெருமானை நம்புபவர்கள் திருமாலை வழிபடவும், தரிசிக்கவும் வரவேற்கப்படுகிறார்கள்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அதன் சொந்த மரபுகள் மற்றும் கொள்கைகள் உள்ளன. அவை மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும்.

ஜெகன் மோகன் ரெட்டி கோவிலுக்கு போகக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. சமீபகால சர்ச்சைகளால், இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டு, பக்தர்கள் போராட்டங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அவர் திருமலைக்கு வருகை தந்தால், தாங்களும் அணிதிரள்வதாக இக்குழுக்கள் தெரிவித்துள்ளன. அமைதியையும், ஒழுங்கையும் பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஏன் தவறான தகவல்களை பரப்புகிறார்? ஒவ்வொரு மதத்திற்கும் மரியாதைக்குரிய மரபுகள் மற்றும் கொள்கைகள் உள்ளன.

இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News