இந்தியா
பட்ஜெட் 2024: லட்சத்தீவு சுற்றுலாவுக்கு மத்திய அரசு முக்கியத்துவம்
- 2025-26-ம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- வருமான வரி ரிட்டன்ஸ் 2013-ம் ஆண்டில் 90 நாட்கள் இருந்த நிலையில் அது 10 நாளாக குறைந்து உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-
10 ஆண்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2.4 மடங்கு உயர்ந்துள்ளது. மாலத்தீவு விவகாரத்தை தொடர்ந்து லட்சத்தீவு சுற்றுலாவுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.
2025-26-ம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார காரிடார் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
வருமான வரி ரிட்டன்ஸ் 2013-ம் ஆண்டில் 90 நாட்கள் இருந்த நிலையில் அது 10 நாளாக குறைந்து உள்ளது. கூடுதலாக செலுத்திய வருமான வரியை திரும்ப தரும் காலம் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.