இந்தியா

போட்டித் தேர்வுகளை கண்காணிக்க உயர்மட்ட குழுவை அமைத்தது மத்திய அரசு

Published On 2024-06-22 10:42 GMT   |   Update On 2024-06-22 10:42 GMT
  • போட்டி தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை.
  • மேலும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசு தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அந்த மசோதா சட்டமானது. தற்போது அந்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்தது.

இந்நிலையில், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வுகளைக் கண்காணிக்க மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தேர்வுகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், நேர்மையான விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்யும். இந்தக் குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியர் உள்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தேர்வு செயல்முறையில் சீர்திருத்தம், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல் குறித்து பரிந்துரை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News