இந்தியா

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000: காங்கிரஸ் வாக்குறுதி

Published On 2024-11-06 17:29 GMT   |   Update On 2024-11-06 17:29 GMT
  • மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
  • அன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகிறது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்று பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய, மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், இம்முறை ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி 5 வாக்குறுதிகளை அளித்துள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பேசியதாவது:

பெண்களுக்கு மாதம் ரூ.3,000 அளிக்கப்படும். மகாலட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் .

விவசாயிகள் பயிர்க்கடன் ரூ.3 லட்சம் தள்ளுபடி செய்யப்படும். கடனை திருப்பிச் செலுத்தியர்களுக்கு ஊக்கத்தொகை 50,000 ரூபாய் வழங்கப்படும்.

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை நீக்க பாடுபடுவது.

ரூ.25 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச மருத்துவம் வழங்கப்படும்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News