இந்தியா

இந்தியா கூட்டணியை ஆதரிக்க பிரதமர் பதவி கேட்டாரா நிதிஷ்குமார்?: காங்கிரஸ் விளக்கம்

Published On 2024-06-08 09:57 GMT   |   Update On 2024-06-08 09:57 GMT
  • டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது.
  • இதில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகச் செயல்பட்டன. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், கிராமப் புறங்களில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்தது. ஆனால் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்க உழைக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தருவதற்காக நிதிஷ் குமார் பிரதமர் பதவி கேட்டார் என ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் கே.சி.தியாகி கூறியுள்ளது குறித்து கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கே சி வேணுகோபால், இதுதொடர்பாக எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என காரிய கமிட்டி விடுத்த வேண்டுகோளை ஏற்ற ராகுல் காந்தி, விரைவில் பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News