இந்தியா

காங்கிரசின் மிகப்பெரிய எதிரி யார்? என்பதை முடிவு செய்வது அவசியம்: ஆனி ராஜா

Published On 2024-06-18 10:48 GMT   |   Update On 2024-06-18 10:48 GMT
  • வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்கிறார்.
  • பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து 14 நாட்களுக்குள் இரண்டில் ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும். அதன்படி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ராகுல் காந்தியிடம் தோல்வியடைந்த ஆனி ராஜா, காங்கிரஸ் கட்சி அவர்களுடன் மிகப்பெரிய எதிர் யார் என்பது முடிவு செய்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆனி ராஜா கூறியதாவது:-

பிரியங்கா காந்தியை வயநாடு தொகுதியில் நிறுத்தியது காங்கிரஸ் கட்சியின் முடிவு. அவர்களுடைய முடிவிற்கு நாங்கள் மரியாதை அளிக்கிறோம். பெண் வேட்பாளரை அறிவித்தது நல்ல விசயம். ஏராளமான பெண்கள் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். அனைத்து கட்சிகளும் இது குறித்து கருதுவது அவசியம்.

பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவதை நான் வரவேற்கிறேன். ஆனால், நான் ராகுல் காந்தியிடம் எழுப்பிய அதே கேள்வியை மரியாதை நிமித்தமாக பிரியங்காக காந்தியிடம் கேட்கிறேன். உங்களுடைய மற்றும் உங்கள் கட்சியுடைய மிகப்பெரிய எதிரி யார்?. வகுப்புவாத-பாசிசப் படைகளா? அல்லது இடது சாரிகளா? என்று கேட்கிறேன்.

இவ்வாறு ஆனி ராஜா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News