இந்தியா

என் மீது நம்பிக்கை வைத்த நாட்டு மக்களுக்கு நன்றி - ராகுல் காந்தி

Published On 2024-06-26 15:33 GMT   |   Update On 2024-06-26 15:33 GMT
  • எதிர்க்கட்சி தலைவர் என்பது ஒரு பதவி மட்டுமல்ல. அது ஒரு பெரிய பொறுப்பு.
  • நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் நன்றி.

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அரசியலில் பெரும் பொறுப்பை முதல்முறையாக ராகுல்காந்தி ஏற்றுள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரானது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில், "என் மீது நம்பிக்கை வைத்த நாட்டு மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் நன்றி.

எதிர்க்கட்சி தலைவர் என்பது ஒரு பதவி மட்டுமல்ல. அது உங்களின் உரிமைகளுக்கான குரலாக மாறி போராட வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏழைகளுக்கும். சிறுபான்மையினருக்கும், விவசாயிகளுக்கும். தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய ஆயுதம். அதன் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் நாங்கள் பதிலடிக் கொடுப்போம்" என்று அவர் பேசியுள்ளார்.

Tags:    

Similar News