என்.டி.ஏ. கூட்டணி: புது விளக்கம் அளித்த காங்கிரஸ்
- உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.
- உ.பி. மற்றும் மகாராஷ்டிரவில் பா.ஜ.க. பெற்ற தோல்வி பின்னடைவாகக் கருதப்படுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 296 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது.
ஏற்கனவே மந்திரிகளாக இருந்த எல்.முருகன், ராஜிவ் சந்திரசேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் தோல்வி அடைந்தனர். உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.
உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற தோல்வி பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பவன் கெரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாராஷ்டிர மக்கள் பா.ஜ.க.வினருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். அயோத்தியில் அவர்களால் ஒரு இடத்தையும் வெல்ல முடியவில்லை. அயோத்தி மக்களை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்? என்.டி.ஏ. கூட்டணியின் தற்போதைய விளக்கம் நாயுடு சார்ந்த கூட்டணி அல்லது நிதிஷ் சார்பு கூட்டணி என தெரிவித்தார்.