இந்தியா

ஸ்ரீராமர் போஸ்டர், ஹனுமான் வேடம்: டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன் குவிந்த தொண்டர்கள்

Published On 2023-12-03 02:05 GMT   |   Update On 2023-12-03 03:29 GMT
  • இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல்.
  • ஆனால், நான்கு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. மிசோரம் மாநிலம் வாக்கு எண்ணிக்கை நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. சத்தீஸ்கர், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

என்றபோதிலும், அந்தந்த கட்சித் தலைவர்கள் நான்கு மாநிலங்களிலும் நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம் எனத் தெரிவித்து வருகின்றனர்.

இன்று வாக்கு எண்ணிக்கையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். அதன்பின் வாக்கு எந்திரங்கள் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன் திரண்டுள்ளனர். அவர்கள் கைகளில் பதாதைகளுடன் நின்றுள்ளனர். மேலும், சிலர் பட்டாசு வெடித்து தற்போதே கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஒரு காங்கிரஸ் தொண்டர் ஹனுமான் வேடமணிந்து ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது.

Tags:    

Similar News