நீட் மோசடி விவகாரம்: என்டிஏ அலுவலகத்திற்குள் புகுந்த காங். மாணவ பிரிவினர்- உள்பக்கம் பூட்டியதால் பரபரப்பு
- என்டிஏ நடத்திய நீட் தேர்வில் முறைகேடு என மாணவர்கள் குற்றச்சாட்டு.
- சிபிஐ இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
நீட் தேர்வில் பேப்பர் லீக், கருணை மதிப்பெண் வழங்கியது போன்ற விசயங்கள் வெளியானதால் மோசடி நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். தற்போது அரசியல் கட்சிகள் இந்த விசயத்தை கையில் எடுத்து மிகப்பெரியதாக்கியுள்ளது.
இதனால் மத்திய அரசு வேறு வழியின்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று ஒருவரை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் பிரிவினர் இன்று போராட்டம் நடத்தினர். தேசிய மாணவர்கள் சங்கம் இந்த போராட்டத்தை நடத்தியது.
திடீரென 100-க்கும் மேற்பட்டவர்கள் தேசிய தேர்வு முகமை வளாகத்திற்குள் நுழைந்ததுடன் அலுவலகத்திற்குள் சென்றனர். வளாகத்தில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர்.
இதற்கிடையே அலுவலகத்திற்குள் நுழைந்தவர்கள் உள்பக்கமாக பூட்டிக்கொண்டனர். வெளியில் உள்ளவர்கள் கைது செய்யப்படுவதை பார்த்து தாங்களும் கைது செய்யப்படுவோம் என்பதை உள்பக்கம் பூட்டிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Congress's student wing, unions protest at Union Minister Kishan Reddy's residence over NEET issue.#NEETIssue #Congress #NSUI #KishanReddy pic.twitter.com/vYM3LJPraB
— The Munsif Daily (@munsifdigital) June 22, 2024
அதேபோல் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி வீட்டிற்குள்ளே போராட்டம் நடத்த முயன்றவர்கள் செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.