இந்தியா

இந்தியாவில் கொரோனா JN1... உண்மையை உடைத்து பேசிய மருத்துவர்

Published On 2023-12-23 15:25 GMT   |   Update On 2023-12-23 15:25 GMT
  • ஒமிக்ரான் வகையில் இருந்து உருமாறிய JN1 எனும் வைரஸ் பரவி வருகிறது.
  • உலக சுகாதார மையம் உலக நாடுகளை எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி இருக்கிறது.

இந்தியாவில் புதிய வகை கொரோனா JN1 பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா தொற்றுக்கு பிறகு பல்வேறு உருமாற்றங்களால் புதிய வகை வைரஸ்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் கொரோனா ஒமிக்ரான் வகையில் இருந்து உருமாறிய JN1 எனும் வைரஸ் பரவி வருகிறது.

புதிய வகை கொரோனா பரவலை தொடர்ந்து, உலக சுகாதார மையம் உலக நாடுகளை எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில், புதிய வகை கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் INSACOG அமைப்பின் தலைவர், மருத்துவர் என்.கே. அரோரா உண்மை விவரங்களை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த வாரம் வரையிலும், கடந்த எட்டு வாரங்கள் வரையிலும் 22 பேருக்கு புதிய வகை கொரோனா JN1 பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வகை வைரஸ் வேகமாக பரவுவதாக எந்த ஆதாரமும் இல்லை. மற்ற வகை கொரோனா பாதிப்புகளை போன்ற அறிகுறிகளை JN1 வகையும் வெளிப்படுத்துகிறது."

"கொரோனா JN1 பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பதாக எந்த தகவலும் இல்லை. தற்போதைய சூழலில் இந்த வகை கொரோனா பாதிப்பு குறித்து பதற்றம் அடைய வேண்டியதில்லை, மாறாக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்," என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News