இந்தியா

நாட்டின் நலத்திட்டங்கள்-கொள்கைகள் ஏழைகளுக்கு ஆதரவாக இல்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Published On 2024-05-29 04:35 GMT   |   Update On 2024-05-29 04:35 GMT
  • நமது கொள்கைகள் ஏழைகளை நோக்கியதாக மாற்றுதவன் மூலம் சமத்துவ சமுதாயத்தை உருகாக்க முடியும்.
  • நமது நாட்டின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஏழைகளுக்கு ஆதரவாக இல்லை.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் எம்.பி. வீரேந்திரகுமார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் 'உள்ளடக்கிய வளர்ச்சி கட்டுக்கதையும், யதார்த்தமும்' என்ற தலைப்பில் ப.சிதம்பரம் பேசியதாவது:-

ஒருவருக்கொருவர் பிரதிபலிக்கும் பொருளாதார மற்றும் சமூக படிநிலைகளை நாம் புரிந்து கொண்டு நமது கொள்கைகளை அடிமட்டத்தில், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு மாற்றியமைக்காவிட்டால் நம்மை சமத்துவ சமூகம் என்று அழைக்க முடியாது. சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியமாகும்.

தற்போதைய சமூகம் சமமானதாகவோ நியாயமானதாகவோ இல்லை. முதலாளித்துவ மற்றும் பணக்கார நாடுகள் சமத்துவ சமூகங்களை உருவாக்கியுள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வியை உலகளாவியதாகவும், இலவசமாகவும் மாற்றுவதன் மூலம் சமத்துவ சமூகங்களை உருவாக்க முடியும்.

பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மழலையர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, சிறிய நோய் முதல் பெரிய அறுவை சிகிச்சை வரை இலவசம். எனவே நமது கொள்கைகள் ஏழைகளை நோக்கியதாக மாற்றுதவன் மூலம் சமத்துவ சமுதாயத்தை உருகாக்க முடியும்.

ஆனால் நமது நாட்டின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஏழைகளுக்கு ஆதரவாக இல்லை. உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கே வழங்கி உள்ளனர். நம் நாட்டின் கொள்கைகள் ஏழைகளுக்கு முன்னோடியாக இல்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இது போன்று பல உதாரணங்களை கூற முடியும்.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

Tags:    

Similar News