ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட காரின் மேற்கூரையில் 2 மணி நேரம் சிக்கித்தவித்த தம்பதி
- உடனே அந்த தம்பதி காரில் இருந்து இறங்கி மேற்கூரையின் மீது ஏறினர்.
- தீயணைப்புத் துறையினர் நீர்மட்டம் குறையும் வரை காத்திருந்து அவர்களை மீட்டனர்.
குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலத்தை கடக்கும்போது அடித்து செல்லப்பட்டதால், ஒரு தம்பதி கிட்டத்தட்ட நீரில் மூழ்கிய கார் மீது சுமார் 2 மணி நேரம் ஆபத்தான நிலையில் இருந்தனர். இடார் நகரில் வெள்ள நீரோட்டம் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு அதிகாரிகள் நீர்மட்டம் குறைந்த பின்னர் தம்பதியினரை மீட்டனர்.
கரோல் ஆற்றின் தரைப்பாலத்தை கார் கடக்க முயன்றபோது, சுமார் 1.5 கி.மீ. தூரம் தள்ளி, காரின் மேற்பகுதி மட்டும் தெரியும்படி தண்ணீருக்குள் மூழ்கியது.
உடனே அந்த தம்பதி காரில் இருந்து இறங்கி மேற்கூரையின் மீது ஏறினர். அவர்கள் அதிகாரிகளால் மீட்கப்படும் வரை சுமார் 2 மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்தனர்.
தீயணைப்புத் துறையினர் நீர்மட்டம் குறையும் வரை காத்திருந்து அவர்களை மீட்டனர்.
தனக்கு முன்னால் ஒரு வாகனம் வெற்றிகரமாக மறுபுறம் சென்றதைக் கண்டதால், அதைக் கடப்பது பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாதையில் கடக்க முயன்றதாக சுரேஷ் மிஸ்திரி கூறினார்.