இந்தியா
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை: கெஜ்ரிவால் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி ஐகோர்ட்
- அமலாக்கத்துறை தன்னை கைது செய்யக்கூடாது என முதல் மந்திரி மனுதாக்கல் செய்தார்.
- கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் இன்று நிராகரித்துள்ளது.
புதுடெல்லி:
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.
டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16-ம் தேதி ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதல் மந்திரி கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர்.