இந்தியா
டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு- அரியானா அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
- டெல்லிக்கு வழங்கப்படும் நீரை எக்காரணம் கொண்டும் தடுத்து வைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
- குடிநீர் வீணாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இச்சூழலில் அம்மாநில அரசு அரியானாவில் இருந்து கூடுதல் தண்ணீர் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று டி.கே.சர்மா, கே.வி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இமாச்சல் வழங்கும் நீர் டெல்லிக்கு தடையின்றி சென்று சேர வேண்டும் என்று அரியானா அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லிக்கு வழங்கப்படும் நீரை எக்காரணம் கொண்டும் தடுத்து வைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், குடிநீர் வீணாகாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.