இந்தியா
உருளைக்கிழங்கை காணோம் என புகார் அளித்த நபர்.. என்ன சரக்கு அடிச்சிருக்கீங்க என கேட்ட போலீசார்
- 250 கிராம் உருளைக் கிழங்கை யாரோ திருடிவிட்டதாக போலீசாரிடம் விஜய் வர்மா புகாரளித்தார்.
- விஜய் வர்மா பேசியதை போலீசார் வீடியோ எடுத்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் மன்னபுர்வாவில் வசிக்கும் விஜய் வர்மா என்பவர், மது அருந்திவிட்டு சமைத்து சாப்பிடுவதற்காக வைத்திருந்த 250 கிராம் உருளைக் கிழங்கை யாரோ திருடிவிட்டதாக போலீசாருக்கு செல்போன் மூலம் புகாரளித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் நடந்ததை அவர் கூறியுள்ளார். இதனை போலீசார் வீடியோ எடுத்துள்ளனர்.
உருளைக்கிழங்கு காணவில்லை என்று போலீசாரிடம் விஜய் வர்மா சீரியசாக பேச, சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், "என்ன மது அருந்தினீர்கள்?" என போலீசார் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.