இந்தியா

சிக்கிமில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2024-08-09 04:01 GMT   |   Update On 2024-08-09 04:01 GMT
  • சிக்கிமின் சோராங் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
  • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. சிக்கிமின் சோராங் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து வீடுகள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News