இந்தியா

தேர்தல் பத்திர விவகாரம்- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு

Published On 2024-03-11 09:18 GMT   |   Update On 2024-03-11 09:51 GMT
  • சொந்த வங்கி தரவுகளை மறைத்ததற்காக தலைகுனிந்து நிற்கிறது.
  • நன்கொடை வழங்கியவர்களுக்கு ஆசீர்வாதம்- சாமானிய மக்களின் மீது வரி சுமை.

தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு கால அவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு அளித்துள்ளார்.

மேலும், இந்திய வரலாற்றிலேயே தேர்தல் பத்திரம் என்பது மிகப்பெரிய ஊழல் என்று நிரூபணமாக போகிறது என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

கருப்பு பணத்தை 100 நாளில் மீட்போம் என கூறி ஆட்சிக்கு வந்த அரசு, சொந்த வங்கி தரவுகளை மறைத்ததற்காக தலைகுனிந்து நிற்கிறது.

ஊழல் தொழிலதிபர்கள், அரசுக்கு இடையிலான தொடர்பு அம்பலமாவதன் மூலம், பிரதமரின் உண்மையான முகம் வெளிப்பட உள்ளது.

நன்கொடை வழங்கியவர்களுக்கு ஆசீர்வாதம்- சாமானிய மக்களின் மீது வரி சுமை. இதுதான் மோடி அரசு" என்றார்.

Tags:    

Similar News