இந்தியா

மத்திய பிரதேச சட்டசபை சபாநாயகராக முன்னாள் மத்திய மந்திரி தேர்வு

Published On 2023-12-20 13:11 GMT   |   Update On 2023-12-20 13:11 GMT
  • மத்திய பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
  • முதல் மந்திரியாக மோகன் யாதவ் பதவி ஏற்றார்.

போபால்:

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த மாதம் 7-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றது.

இதற்கிடையே, மத்திய பிரதேச மாநில முதல் மந்திரியாக மோகன் யாதவ் தேர்வானார். தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்.எல்.ஏ.வான மோகன் யாதவ் முதல் மந்திரியாக பதவி ஏற்றார்.

இந்நிலையில், மத்திய பிரதேசம் சட்டசபையில் சபாநாயகராக முன்னாள் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News