ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம்
- சைவ உணவுக்காரர்களுக்கு இந்த மருந்து வெல்லத்தோடு சேர்த்து கொடுக்கப்படும்.
- கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் பேருக்கு மீன் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஐதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும், பருவ மழையின் தொடக்க காலமான ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அப்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருள்ள மீன் வாயில் மருந்தை வைத்து அதை அப்படியே பாதிக்கப்பட்டவரின் தொண்டையில் வைத்து விழுங்க வைப்பார்கள்.
இலவசமாக வழங்கப்படும் இந்த மீன் மருந்தை பெற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆஸ்துமா நோயாளிகள் அங்கே கூடுவது வழக்கம். இதை பாத்தினி ஹரிநாத் கவுட் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்கள்.
நிகழ்ச்சியில் மீன் பிரசாதமாக, உயிருள்ள விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை பேஸ்ட்டை வைத்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும்.
சைவ உணவுக்காரர்களுக்கு இந்த மருந்து வெல்லத்தோடு சேர்த்து கொடுக்கப்படும்.
நம்பள்ளியில் உள்ள கண்காட்சி மைதானத்தில், பத்தினி குடும்பத்தினரால், ஆண்டுதோறும் வழங்கப்படும் 'மீன் பிரசாதம்' ஜூன் 8ம் தேதி பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்தினி குடும்பத்தினர் மீன் பிரசாதம் வழங்குகிறார்கள்.
இந்த ஆண்டு வருகிற ஜூன் 8-ந் தேதி மீன் பிரசாதம் வழங்க உள்ளனர்.
கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் பேருக்கு மீன் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு, எண்ணிக்கை அதிகரிக்கும் என, ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.