இந்தியா
பீகார் சட்டசபை மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக ராப்ரி தேவி தேர்வு
- சட்டசபை மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக ராப்ரி தேவி தேர்வு செய்யப்பட்டார்.
- சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் செயல்பட்டு வருகிறார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாரும், துணை முதல் மந்திரியாக தேஜஸ்வி யாதவும் பதவி வகித்து வந்தனர்.
இதற்கிடையே, கடந்த மாதம் கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ்குமார், திடீரென பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதா தள நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் சட்டசபை மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரியும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவி தேர்வு செய்யப்பட்டார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேஜஸ்வி யாதவ் செயல்பட்டு வருகிறார்.