இந்தியா

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முன்னாள் மந்திரி சுரேஷ்குமார் வெற்றி

Published On 2023-05-14 02:08 GMT   |   Update On 2023-05-14 02:08 GMT
  • 3 சுற்றுகளில் புட்டண்ணா முன்னிலை வகித்தார்.
  • ஒட்டு மொத்தமாக 15 சுற்றுலாக ஓட்டு எண்ணிக்கை நடந்திருந்தது.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபை தேர்தலில் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதியில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவியது. பா.ஜனதா சார்பில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் சுரேஷ்குமாரும், காங்கிரஸ் சார்பில் புட்டண்ணாவும் களத்தில் இருந்தனர்.

பா.ஜனதா கட்சியில் மேல்-சபை உறுப்பினராக (எம்.எல்.சி) இருந்த புட்டண்ணா, அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டும், பா.ஜனதாவில் இருந்து விலகியும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருந்தார். அவருக்கு காங்கிரஸ், ராஜாஜிநகர் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கி இருந்தது. இந்த நிலையில், நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது முதல் 3 சுற்றுகளில் புட்டண்ணா முன்னிலை வகித்தார். அதன்பிறகு, சுரேஷ்குமாருக்கு அதிக ஓட்டுகள் கிடைத்ததால் இருவரும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தனர்.

ஒட்டு மொத்தமாக 15 சுற்றுலாக ஓட்டு எண்ணிக்கை நடந்திருந்தது. இறுதியில் ராஜாஜிநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரும், முன்னாள் மந்திரியுமான 7 ஆயிரத்து 914 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் புட்டண்ணா 50 ஆயிரத்து 306 வாக்குகளும், சுரேஷ்குமார் 58 ஆயிரத்து 220 ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.

Tags:    

Similar News