இந்தியா

அதிபர் மேக்ரான்

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகை

Published On 2022-10-18 23:49 GMT   |   Update On 2022-10-18 23:49 GMT
  • அணுசக்தியில் இந்தியா, பிரெஞ்சு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க பிரான்ஸ் மந்திரி இங்கு வந்துள்ளார்.
  • பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வரவுள்ளார்.

புதுடெல்லி:

அணுசக்தியில் இந்தியா-பிரெஞ்சு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க பிரான்ஸ் மந்திரி கிறிசோலா ஜக்கரோபவுலோ தற்போது இந்தியா வந்துள்ளார்.

மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங்கை சந்தித்து, கூட்டு ஒத்துழைப்புடன் மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஜெய்தாபூர் தளத்தில் அணு உலைகள் அமைப்பதை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசித்தார்.

இந்தியாவுடன் அணுசக்தி ஆலோசகர் தாமஸ் மியூசெட் உள்ளிட்ட பிற பிரான்ஸ் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அடுத்த ஆண்டின் (2023) தொடக்கத்தில் இந்தியாவுக்கு வரக்கூடும் என அணுசக்தித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News