இந்தியா

குலாம்நபி ஆசாத்

மக்களவை தேர்தலில் போட்டியில்லை: குலாம் நபி ஆசாத்

Published On 2024-02-17 14:18 GMT   |   Update On 2024-02-17 14:18 GMT
  • 2022-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியில் வந்த குலாம் நபி ஆசாத் புதுக்கட்சி தொடங்கினார்.
  • 2014 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த பிறகு போட்டியிடுவதை தவிர்த்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த குலாம் நபி ஆசாத். கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற பெயரில் ஜம்மு-காஷ்மீரு் மாநில கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டேன். கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன். நான் போட்டியிட்டால் அந்த ஒரு இடத்திலேயே முடங்கிவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

2014 மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து வருகிறார். 2024 தேர்தல் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக கட்சி தொண்டர்களை தயார்படுத்தி வருகிறார்.

ஜம்மு-காஷ்மீரில் மக்களவை தேர்தல் குறித்த நேரத்தில் 100 சதவீதம் நடந்துவிடும். ஆனால் சட்டமன்ற தேர்தலை பற்றி யூகிக்க மட்டுமே முடிகிறது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த காலக்கெடு விதித்துள்ளது" என்றார்.

2022-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியில் வந்த குலாம் நபி ஆசாத், அதன்பின் ஜம்மு-காஷ்மீர மாநிலத்தில் புதுக்கட்சியை தொடங்கியுள்ளார்.

Tags:    

Similar News