இந்தியா

தேவையற்ற பொருட்களை விற்பனை செய்த வகையில் ரூ. 2364 கோடி வருவாய்: மத்திய அமைச்சர்

Published On 2024-11-11 05:50 GMT   |   Update On 2024-11-11 05:50 GMT
  • பேப்பர் உள்ளிட்ட கழிவு பொருட்களை விற்பனை செய்ததில் அரசுக்கு ரூ.2,364 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
  • தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையை பிரதமர் மோடி பாராட்டினார்.

மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட பேப்பர் உள்ளிட்ட பல்வேறு கழிவு பொருட்களை விற்பனை செய்த வகையில் மத்திய அரசு ரூ.2,364 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு பின்னர் தேவையற்ற பொருட்களாக மாறிய பேப்பர் உள்ளிட்ட கழிவு பொருட்களை விற்பனை செய்ததில் அரசுக்கு ரூ.2,364 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்கிராப் விற்பனையின் மூலம் மூன்றாண்டுகளில் 2,364 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதற்காக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) முயற்சிகளை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

Tags:    

Similar News