இந்தியா

துக்க நாளில் கலைநிகழ்ச்சி நடத்திய அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள்- நடவடிக்கை எடுக்குமாறு முதல்-மந்திரியிடம் புகார்

Published On 2023-07-22 10:43 GMT   |   Update On 2023-07-22 10:43 GMT
  • 2017 பேட்ச் மருத்துவ மாணவர்கள் பிரிவுபசார விழாவை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
  • அரசின் அறிவிப்பை மருத்துவக் கல்லூரி போன்ற அரசு நிறுவனமே மீறி உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி புற்றுநோய் பாதிப்புக்கு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்சு விமானம் மூம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு இடங்களில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. பின்பு இறுதிச்சடங்குக்காக திருவனந்தபுரத்தில் இருந்து அவரது செந்த ஊரான கோட்டயம் புதுப்பள்ளிக்கு அரசு போக்குவரத்து கழக பேரூந்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயம் வரை நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டுநின்று உம்மன் சாண்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

உம்மன்சர்ண்டியின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் கடந்த 18 மற்றும் 19-ந்தேதி ஆகிய 2 நாட்கள் துக்க நாளாக கேரள அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து அந்த இருநாட்களிலும் நடக்க இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் உம்மன்சாண்டி மறைந்த 18-ந்தேதியன்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் கலைநிகழச்சி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2017 பேட்ச் மருத்துவ மாணவர்கள் பிரிவுபசார விழாவை முன்னிட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனிடம், முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீகுமார் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், உம்மன் சாண்டி மறைவையடுத்து அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த துக்க நாளில் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சி நடத்தி உள்ளனர்.

மது விருந்தும் நடந்துள்ளது. இது குறித்து காவல் மற்றும் கலால் துறைக்கு தகவல் தெரிவித்தேன். அரசின் அறிவிப்பை மருத்து வக்கல்லூரி போன்ற அரசு நிறுவனமே மீறி உள்ளது. இதனால் அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News