இந்தியா

கட்டணம் இல்லாத மின்சாரம்: இதுதான் இலக்கு என்கிறார் பிரதமர் மோடி

Published On 2024-02-05 01:46 GMT   |   Update On 2024-02-05 01:46 GMT
  • கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற இலக்கை நோக்கி ஓடினோம்.
  • வீட்டிற்கு மேற்கூரையின் மீது சோலார் தகடுகள் பதிக்க ஒரு கோடி குடும்பங்களுக்கு உதவி செய்யப்படும்.

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அசாம் மாநிலம் சென்றிருந்தார். சுமார் 11,599 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், முடிந்த திட்டங்களை திறந்து வைத்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் பிரசாரத்தை நோக்கி ஓடினோம். தற்போது நாங்கள் கட்டணம் இல்லாமல் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற அடுத்த நகர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் வீட்டின் மேற்கூரை மீது சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் தகடுகள் அமைப்பது குறித்து மிகப்பெரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ், ஒரு கோடி குடும்பங்களுக்கு சோலார் தகடுகள் அமைப்பதற்கு மத்திய அரசு உதவி புரியும்.

மேலும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வாழ்க்கையையும் வசதியானதாக்க வேண்டும் என்பதுதான் அரசின் இலக்கு. மத்திய அரசின் பட்ஜெட்டில் இது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெடடில், 11 லட்சம் கோடி ரூபாய் கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியின் மிகப்பெரிய ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்குப் பிறகு நான் தற்போது அசாமில் உள்ள அன்னை காமாக்கியா கோவில் வந்துள்ளேன். இங்கு நான் அன்னை காமாக்கியா திவ்ய பரியோஜனா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இது நிறைவு பெறும்போது, இந்தியா மற்றும் உலகில் அன்னை காமாக்கியாவின் பக்தர்களை மகிழ்ச்சியால் நிரப்பும்.

ராமர் கோவிம் கும்பாபிஷேகம் நடைபெற்ற சில தினங்களிலேயே, அதாவது 12 நாட்களில் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News