இந்தியா

கேட்ட கார் தராததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

Published On 2024-05-08 05:48 GMT   |   Update On 2024-05-08 05:48 GMT
  • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
  • மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை அதிகம் கேட்டு கொடுக்க முடியாததால் கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவங்களை கேள்விபட்டிருப்போம். ஆனால் தான் சீதனமாக கேட்ட காருக்கு பதிலாக புதிதாக வேறு காரை வழங்கியதால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

அங்குள்ள முசாபர் நகரை சேர்ந்தவர் அமீர் ஆலம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மணமகன் தனக்கு வரதட்சணையாக ஹூண்டாய் காரை கேட்டிருந்தார். ஆனால் மணமகளின் குடும்பத்தினர் அவருக்கு மாருதி காரை சீதனமாக அளித்துள்ளனர். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தினார்.

இதனால் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் பாதியில் நின்றதை அறிந்து சோகம் அடைந்த மணப்பெண் தனது நிலை குறித்தும், குடும்பத்தினரின் துயரம் குறித்தும் இதுபோன்ற ஆண்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News