கேரளாவில் இன்று முதல் அதி கனமழை - இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட்
- கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- கேரளாவில் உள்ள பட்டினம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2 மாவட்டமங்களுக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படிக், இன்று (மே 14) இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் உள்ள பட்டினம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம்,எர்ணாகுளம், மாலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் திருவனந்தபுரம், பட்டினம்திட்டா, கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மே 15 ஆம் தேதியும், பட்டினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, மாலப்புரம் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மே 16 ஆம் தேதியும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம், பட்டினம்திட்டா, இடுக்கி, மாலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மே 17 ஆம் தேதி மற்றும் மீண்டும் திருவனந்தபுரம், கொல்லம், பட்டினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு மே 18 ஆம் தேதியும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.