இந்தியா

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி.. சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை - அடிவாங்கிய அதானி குழும பங்குகள்

Published On 2024-08-12 05:13 GMT   |   Update On 2024-08-12 05:13 GMT
  • நிப்டி 78 புள்ளிகள் குறைந்து 24,288 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
  • அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது.

அதானி குழும முறைகேடுகளை வெளிப்படுத்திய ஹிண்டன்பர்க் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதானியின் வெளிநாட்டு நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பங்குகளை செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் வைத்திருப்பதனாலேயே முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியது.

இந்த புதிய அறிக்கை இன்றைய பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தபடியே வாரத்தின் முதல் நாளான இன்றுபங்குச்சந்தை பெரும் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 409 புள்ளிகள் சரிந்து 79,296 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 78 புள்ளிகள் குறைந்து 24,288 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தின் அனைத்து நிறுவன பங்குகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இதன்படி அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவை கண்டு வருகிறது.  

Tags:    

Similar News