இந்தியா (National)

பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை- ராகுல் காந்தி

Published On 2024-10-12 05:09 GMT   |   Update On 2024-10-12 05:09 GMT
  • கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
  • 19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

19 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை விளாசியுள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஒடிஷா மாநிலம் பாலாஷோரில் நடந்த ரெயில் விபத்து போலவே கவரைப்பேட்டையில் விபத்து நடந்துள்ளது. ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?"

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News