இந்தியா

ஆள் கடத்தல், பாலியல் புகார்: எச்.டி. ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Published On 2024-05-08 11:41 GMT   |   Update On 2024-05-08 11:41 GMT
  • 3 நாட்கள் போலிஸ் காவல் முடிந்து ரேவண்ணாவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
  • ரேவண்ணாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோவில் இருந்த மைசூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தியதாக எச்.டி. ரேவண்ணா மற்றும் அவரது உறவினர் சதீஷ் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரேவண்ணாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரிடம் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், 3 நாட்கள் போலிஸ் காவல் முடிந்து ரேவண்ணாவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ரேவண்ணாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனையடுத்து, ரேவண்ணாவை மே 14 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரேவண்ணாவின் ஜாமின் மனு மீதான விசாரணையை பெங்களூரு நீதிமன்றம் நாளைக்கு ஒத்தி வைத்தது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு ரேவண்ணாவை போலீஸ் அழைத்துச் செல்கிறது.

Tags:    

Similar News