இந்தியா

வைஷ்ணவி தேவி கோவிலுக்கு வரும் 18ம் தேதி முதல் ஹெலிகாப்டர் சேவை: முன்பதிவு ஆரம்பம்

Published On 2024-06-11 10:47 GMT   |   Update On 2024-06-11 10:47 GMT
  • காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோவில் சிறப்பு தரிசனத்துக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறது.
  • ஒரே நாளில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக இந்த சேவை தொடங்கப்படுகிறது.

ஜம்மு:

காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில் மிகவும் பிரபலமானது. அக்கோவிலில் ஒரே நாளில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் தனது ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறது.

ஜம்முவில் இருந்து சஞ்சி சாத்வரை ஹெலிகாப்டர் இயக்கப்படும். அங்கிருந்து பேட்டரி கார் மூலம் கோவில் அமைந்துள்ள பவனுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

சிறப்பு தரிசனம் முடித்து, அதே நாளில் திரும்ப விரும்பும் பக்தர்களுக்கு ரூ.35,000, அடுத்த நாள் திரும்ப விரும்பும் பக்தர்களுக்கு ரூ.50,000 கட்டணமாக வசூலிக்கப்படும்.

இந்நிலையில், மாதா வைஷ்ணவ தேவி கோவில் நிர்வாக அலுவக அதிகாரி அன்ஷுல் கர்க் கூறுகையில், ஜூன் 18 முதல் ஜம்மு மற்றும் வைஷ்ணவ தேவி கோவில் இடையே நேரடி ஹெலிகாப்டர் சேவையை தொடங்குகிறோம். தொகுப்பின் ஒரு பகுதியாக பேட்டரி கார் சேவை, முன்னுரிமை தரிசனம், பிரசாத் சேவா மற்றும் பைரோன் கோவிலுக்கு ரோப்வே போன்ற பிற வசதிகள் கிடைக்கும். இந்த தொகுப்பை எங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பக்தர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News